வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By அ‌ய்யநாத‌ன்

70 இடங்கள் - விஜயகாந்தின் நிபந்தனை?

அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்குள் வரவேண்டுமானால் தனது கட்சிக்கு 70 இடங்களை ஒதுக்கிட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உறுதியாக கூறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
FILE

சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றிய அறிவிப்பவெளியிடுவார் என்று அவருடைய கட்சியின் தொண்டர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகளிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கூட்டணி வைக்கலாமா, வேண்டாமா என்று கேட்டு, தனது தொண்டர்களை கை தூக்கச் சொன்ன விஜயகாந்த், அவர்களில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு ஆதரவாக கை தூக்கியதை பார்த்த பிறகு, “கூட்டணியை நான் முடிவு செய்வேன், உங்களை யாரிடமும் அடகு வைத்து விட மாட்டேன” என்று கூறி சப்பென்று முடித்தார்.

அதன் பிறகு விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திலும் கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்கவில்லை. கூட்டணித் தொடர்பான (இரகசிய) பேச்சுவார்த்தைகள் இன்னமும் தொடர்ந்து வருகிறது என்றும், விஜயகாந்த் கேட்கும் அளவிற்கு தொகுதிகளை ஒதுக்கித் தருவதற்கு அ.இ.அ.தி.மு.க. தலைமை தயாராக இல்லையென்பதால், கூட்டணி அமைவது இன்னமும் உறுதியாகவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில், அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு சமீபகாலமாக அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு மழைபோல் சோவென்று ஆலோசனைகளை கொட்டி வரும் ‘பழைய’ ஆளே ஈடுபட்டு வருகிறார் என்றும், அவரிடம் 70 இடங்களுக்கு குறைய மாட்டோம் என்று விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

FILE

அ.இ.அ.தி.மு.க. தலைமை குறைந்தது 150 இடங்களிலாவது போட்டியிட்டால் மட்டுமே தங்களால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும் என்றும், அப்படிப்பட்ட நிலையில் மற்ற கட்சிகளுக்கும் இடம் ஒதுக்க வேண்டியுள்ளதால், தே.மு.தி.க. தங்களது கோரிக்கையில் இருந்த இறங்கி வர வேண்டும் என்று கோரியதாகவும், அதற்கு பதிலளித்த விஜயகாந்த், தி.மு.க.வை ஆட்சியில் இருந்த இறக்க வேண்டுமானால், நீங்கள் இறங்கி வர வேண்டும் என்று கூறியது மட்டுமின்றி, கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்க வேண்டு்ம் என்று கூறியுள்ளார். இது அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு கசப்பாக இருக்கிறதாம்.

விஜயகாந்தின் இந்த ‘விடாக்கண்டன’ நிலையகூட்டணி அமைவதில் முன்னேற்றம் காண முடியாத நிலை உள்ளதென கூறப்படுகிறது.

பணமோ பணம்!

இதற்கிடையே, தே.மு.தி.க.வை தனியாக போட்டியிட வைக்க தி.மு.க. தரப்பில் பெரும் முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த முயற்சியில் அக்கட்சியின் முன்னணி அமைச்சர் ஒருவரே ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தே.மு.தி.க. தலைமைக்கு ‘கணிசமான’ தொகை (பல நூறு கோடிகள்) கொடுக்கப்படும், அது மட்டமின்றி, தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றெல்லாம பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு இணங்க விஜயகாந்த் மறுத்துவிட்டதாகவும், அதை கருத்தில் வைத்தே, “உங்களை நான் அடகு வைத்துவிட மாட்டேன்” என்று கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மொத்தத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் கூட்டணி முடிவே தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவை அ.இ.அ.தி.மு.க.விற்கு சாதமாக திருப்ப முடியும் என்ற கருத்து தே.மு.தி.க.வையும் தாண்டி எல்லா கட்சி வட்டாரங்களிலும் நிலவுகிறது.