டெல்லி மாணவி பெயரைக் கோரும் சசி தரூர் ட்வீட்டிற்கு எதிர்வினைகள்!

Webdunia|
FILE
கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு 13 நாட்கள் மருத்துவமனையில் மரண வேதனையுற்று சிங்கப்பூர் மருத்துவமனையில் கடைசியாக உயிரை விட்ட டெல்லி மாணவியின் பெயரை வெளியிடுவதுதான் நல்லது என்று மத்திய அமைச்சர் சசி தரூர் தனது டுவிட்டரில் கூறியதற்கு ஆதராவகவும் எதித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கிரண் பேடி கூறுகையில், "சசி தரூர் கூறுவது இந்தியாவைப் பொறுத்தவரை தனிச்சிறப்பானது, ஆனால் உலகில் மற்ற நாடுகளில் இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் உள்ள மேகன் சட்டம், பிராடி சட்டம், ஆகியவை பாதிக்கப்பட்டவர்களின் மரியாதைக்குரிய நினைவாக வெளியிடப்படுகிறது. தரூரின் கருத்து வரவேற்கத்தக்கதே.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நாம் ஏற்கனவே நிர்பயா என்று மறைந்த டெல்லி மாணவியை அழைக்கிறோம். எனவே சட்டமியற்றினால் நிர்பயா சட்டம் என்று குறிப்பிடலாம். பாதிக்கப்பட்டவரின் பெயரில் சட்டமியற்றுவது ஆழமான மரியாதையினால் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் மனீச்த் திவாரி சசி தரூரின் கருத்திற்கு பதில் அளிக்கையில், இது குறித்து விவாதத்தில் பங்கேற்க விரும்பைல்லை, ஆனால் கற்பழிப்புகளுக்கு எதிரக கடுமையாக சட்டம் இயற்றப்படவேண்டும் என்பது உண்மைதான்.

வழக்கம் போல் பாஜக உறுப்பினர் ஷானவாஸ் ஹுசைன் சசி தரூரின் கருத்தை மறுத்துள்லார். பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடுவது பயன்படுத்துவது கோர்ட் உத்தவௌகளை மீறிய செயல், மேலும் அது தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்லும். தரூர் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை தெரிவிப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது.
பெண் இறந்த பிறகு அவரது பெயரை வெளியிடாமல் இருப்பதில் என்ன நன்மை இருக்கிறது என்று கூறும் சசி தரூர், அவர்கள்து பெற்றோர் சம்மதித்தால் வரவிருக்கும் சட்டத்தை அந்தப் பெண்ணின் பெயரிலேயே வைக்கலாம் என்று டுவீட் செய்திருந்தார்.

அவரது அடையாளம் வெளியிடப்படுவதுதான் நல்லது. அவரின் உண்மையான பெயரில் எதுவும் நடப்பதுதான் நல்லது என்றார் சசி தரூர்.
ஆனாலும் சசி தரூருக்க்கு டுவிட்டரிலேயே கடுமையான எதிர்வினைகள் தோன்றியுள்ளன. எதற்காக கோயில் கட்டுவது, மரியாதை செய்வது எல்லாம்? சட்டத்தை ஒழுங்காக சீர் திருத்தம் செய்து கிரிமினல் நீதித் துறையில் சீர்திருத்தங்கள் செய்வதை விடுத்து அந்த பெண்ணின் பெயர்தான் முக்கியாமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :