தென்காசி அருகே ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டிவருவதாக கூறி 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருமலாபுரம், சுற்று வட்டாரப் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர். தங்களின் நீராதாரமாக விளங்கி வரும் திருப்பன்குளத்தை சிலர் வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.