ஊழல்... ஊழல்! நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டினால் அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு - தலைமை தணிக்கைக் குழு

Webdunia|
FILE
2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் ஏலமில்லாமல் இஷ்டத்துக்கு, வேண்டப்பட்டவர்களுக்கு அரசு ஒதுக்கிய வகையில் அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு என்று இந்திய தலைமை தணிக்கை குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லி விமான நிலைய கட்டுமானத்தில் ஜி.எம்.ஆர். நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாக அரசுக்கு ரூ.24,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் நாட்டில் நடைபெற்று வரும் மின் திட்டங்களில் அரசும் தனியாரும் போட்டுக் கொண்டுள்ள லாபப் பகிர்வு ஒப்பந்தங்களின் படி அரசுக்கு ஏராளமான இழப்பு என்றும் இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை தணிக்கை குழு அறிக்கை அறிவித்துள்ள நிலையில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2ஜி ஊழலில் 1,76,000 கோடி அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு கொடி பிடித்த பத்திரிக்கைகளும் ஊடகங்களும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் ஏற்பட்டுள்ள 10 லட்சம் கோடி இழப்பிற்கு என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் அடிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 44 பில்லியன் டனக்ள் நிலக்கரி அடிமாட்டு விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 194 நிலக்கரி பிளாக்குகள் வெறும் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வரைவு அறிக்கையைப் போல் அல்லாமல் தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இந்த முழு அறிக்கையில் நிலக்கரி முறைகேட்டில் பிரதமர் அலுவலகத்திற்கு உள்ள தொடர்பை குறிப்பிடாமல் மறைத்துள்ளது.
இந்த நிலக்கரி முறைகேட்டில் பயனடைந்த நிறுவனங்கள் வருமாறு: டாடா குழுமம், ஜிண்டால் ஸ்டீல் அன்ட் பவர், அனில் அகர்வால் குழுமம், எஸ்ஸார் குழுமம், அடானி குழுமம், ஆர்சலர் மிட்டல் மற்றும் லான்கோ ஆகியவையாகும்.

ஏல நடைமுறைகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளில் வேண்டுமென்றே தாமதம் செய்து இதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் லாபம் ஏற்படுத்திக் கொள்ள வழி வகை செய்துள்ளது மத்திய அரசு.
டெல்லி விமான நிலைய முறைகேடு:

டெல்லி விமான நிலைய கட்டுமானத்திற்காக ஜி.எம்.ஆர். நிறுவனத்திற்குச் சொந்தமான டெல்லி இன்டெர்னேஷனல் ஏர்போர்ட் நிறுவனத்திற்கு 239 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இது சந்தை விலைக்கு அளிக்கப்படாமல் குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. சந்தை விலை ரூ.24,000 கோடி. இது அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு.
60 ஆண்டுகால குத்தகை காலத்தில் சுமார் ரூ.1,63,557 கோடி வருவாய் ஈட்டித் தரும் சக்தி உள்ள இந்த நிலம் ஆண்டுக்கு ரூ.100 என்ற தொகைக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சீப்பாக நிலத்தை வாங்கிய பிறகும் ஜி.எம்.ஆர்.நிறுவனம் விமானப் பயணிகளிடமிருந்து பயனாளர் மேம்பாட்டு கட்டணம் வசூலித்து வருகிறது!
இந்வசூலமூலமஅந்நிறுவனமூ.3400 கோடி வருவாயபெற்றுள்ளது!! பயனாளரமேம்பாட்டகட்டணமவசூலிப்பதமுதலஒப்பந்தத்திலஇல்லை, பிறகமத்திவிமானபபோக்குவரத்தஅமைச்சகமஒப்பந்தத்திலசேர்த்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :