வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (16:20 IST)

பந்தை அடிப்பதில் சேவாக் அளவுக்கு நான் சிறந்த பேட்ஸ்மெனை பார்த்ததில்லை - கிரெக் சாப்பல்!

2007 ஆம் ஆண்டு உலகக்கோப்ப படுதோல்விகளுக்குப் பிறகு ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு இடையே ஆஸ்ட்ரேலிய பயிற்சியாளர் கிரெக் சாப்பல் இந்திய பயிற்சியாளர் பொறுப்பை துறந்தார்.
அதன் பிறகு அவர், ஃபியர்ஸ் ஃபோகஸ் என்ற புத்தகத்தை எழுதினார். அதில் தனது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி அனுபவங்களை தொகுத்து வழங்கினார்.
 
ஆனால் அதில் அவர் சேவாக் பற்றி எழுதிய கருத்து பற்றி இப்போது மீண்டும் பிரபல கிரிக்கெட் இணையதள கிரிக்கெட் எழுத்தாளர் கேள்வி எழுப்ப அவர் இவ்வாறு கூறினார்:
"ஒவ்வொருவரும் வீரர்களுடன் வித்தையாசமான முறையில் உறவு கொள்வார்கள். அப்போது சேவாக் தன் கிரிக்கெட் வாழ்வில் எந்த நிலையில் இருந்தார் என்றால் தான் தற்போது விளையாடும் முறை தனக்கு சௌகரியமாக உள்ளதாக அவர் உணர்ந்திருந்த காலக்கட்டம்.
 
அவர் எந்த வித மாற்றங்களையும் விரும்பவில்லை.குறிப்பாக உடல் தகுதி அளவில் அவர் அவ்வளவு கவனம் செலுத்தவில்லை. அப்போது நான் கூறினேன், இப்போதைக்கு இது சௌகரியமாக இருக்கும், ஆனால் பின்னல் ஒரு காலத்தில் உடல் தகுதியில் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியம் என்று தெரியவரும் என்று அறிவுறுத்தினேன்.
 
ஆனால் நான் போன பிறகு அவர் உடல் தகுதியில் கவனம் செலுத்தினார். அது ஒரு குறுகிய காலத்திற்கு அவருக்கு பயனளித்தது. அவர் அதனைத் தொடர்ந்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை. 
 
ஆனால் ஒன்றைக்கூறவிரும்புகிறேன், சேவாக் இயல்பாகவே திறமை வாய்க்கப்பட்ட ஒரு வரப்பிரசாதி அவர் அளவுக்கு நான் ஒருவரையும் இந்த விதத்தில் பார்த்ததில்லை. பந்தை அடிப்பவர் என்ற முறையில் அவருக்கு ஈடு இணையாக ஒருவரும் இல்லைதான். 

நான் அவருக்கு கூறியதெல்லாம் அவரது திறமையை அதிகப்படுத்தினால் அவருக்கும் இந்திய கிரிக்கெட்டிற்குமே அது பெரிய பயனை கொடுத்திருக்கும் என்பதுதான்.
என்னால் சிறப்பாக அவருக்காக என்ன செய்ய முடியுமோ நான் செய்தேன், ஆனால் நான் கூறியது அவரை ஊக்குவிக்க போதுமானதாக இல்லை என்றே நினைக்கிறேன்.
 
நாங்கள் இருந்தபோது இரண்டு காலக்கட்டம் அவர் தனது ஆட்டத்தில் சிறப்புக் கவனம் எடுத்துக் கொண்டார், அதனால் அவருக்கு பெரிய பலன்கள் ஏற்பட்டன.
 
அதன் பிறகு அவரால் முடியவில்லையா, அல்லது அவருக்கு சுவாரஸ்யம் போய்விட்டதா என்பது தெரியவில்லை.
 
இவ்வாறு கூறினார் கிரெக் சாப்பல்.