செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : ஞாயிறு, 30 மார்ச் 2014 (13:35 IST)

ஏன் முழுக்கை சட்டைபோட்டு பந்து வீசினேன் - அஸ்வின் விளக்கம்

ஆசியக் கோப்பை போட்டிகளின் போது முழுக்கை சட்டைபோட்டு தனது பவுலிங் ஆக்சனை வேறு விதமாக மாற்றி வீசினார் அஸ்வின், இதற்காக அவர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். ஏன் இந்த வேலை என்று மணீந்தர் சிங் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் முழுக்கைச் சட்டையின் பயன்கள் என்னன்ன என்று அஸ்வின் விளக்குகிறார்:
 
"நான் வித்தியாசமாக வீச வேண்டும் என்று விரும்புகிறேன், ஏதாவது புதிதாக செய்துகொண்டேயிருக்கவேண்டும். ஏதாவது புதிதாக முயற்சி செய்து அதனை பிரயோகிக்கவில்லையெனில் பிறகு என்ன பயன்? ஆசியக்கோப்பைக்கு முன்பாக நான் முழுக்கை சட்டை அணியவில்லை. அது எப்படி இருக்கிறது என்று செய்து பார்த்தேன், முழங்கையை மறைப்பதன் மூலம் அதனை பயன்படுத்தி பந்தை எதிர்புறம் திருப்ப முடிகிறதா என்று பார்த்தேன், அதாவது முழங்கையை மடக்குவது திருப்புவது எந்த அளவுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு. 
சில வீரர்கள் முழுக்கை சட்டைப் போட்டுக்கொண்டு இதனைச் செய்து வருகின்றனர் நான் அந்த போட்டியில் பின் தங்கியிருக்கவேண்டும்?
 
என்று கூறிய அஸ்வின் இன்னும் T20 உலகக் கோப்பையில் இந்த முழுக்கை பரிசோதனையை நல்லவேளையாகச் செய்யவில்லை. இந்த வயதில் சுனில் நரைன் போல் ஆக்சனை மாற்றி என்ன பயன் வந்து விடப்போகிறது? என்று கேட்டால் நான் நிச்சயம் அதனை விடப்போவதில்லை என்று கூறுகிறார் அஸ்வின்.
 
இந்த தொடரில் சிறப்பாக வீசுவது எப்படி?
 
வேகத்தைக் கூட்டி குறைப்பது. அது பயனளிக்கிறது. அளவையும் வேகத்தையும் மாற்றிக்கொண்டேயிருப்பது அவ்வளவே. நான் கொஞ்சம் மெதுவாக வீசும்போது பந்து எதிர்திசையில் திரும்புகிறது என்பதை கண்டுபிடித்தேன். எனக்கே அது என்னவென்று புரியவில்லை.
 
பிட்சில் பந்துகள் பிடித்து பிறகு ரிலீஸ் ஆகிறது என்று கூறமுடியாது, வங்கதேச பிட்ச்கள் மந்தமாக உள்ளது. எனவே இங்கு வீசும்போது பந்துகளின் வேகத்தைக் குறைவாக வீசினால் லாபம் கிட்டும். 

நான் 100 கிமீ வேகம் முதல் 80 அல்லது 75 கிமீ வேகம் என்று மாற்றிக்கொண்டேயிருக்கிறேன், எனவே ஸ்லோவாக வீசுவது என்பது இல்லை. இத்தகைய மாற்றங்கள் அவசியம்.
 
அமித் மிஸ்ரா அதைத்தான் செய்கிறார். அவரை அடித்து நொறுக்கலாம் என்று பேட்ஸ்மென்கள் தப்புக் கணக்கு போடும்போது நமக்கு வாய்ப்பு.
 
முடிவு ஓவர்களை வீசும்போது நாம் நமது அகங்காரத்தை விழுங்கி விடவேண்டும். அங்கு ரன்களை கட்டுப்படுத்துவதுதான் வேலை.
 
பேட்ஸ்மென்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே பவுலர்களுக்கும் ஆட்ட நாயகன் விர்து வழங்குவது அவசியம், ஏனெனில் அதுதான் அவர்கள் ஆட்டத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம்.
 
இவ்வாறு கூறினார் அஸ்வின்.