அஸ்வினின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 17 அக்டோபர் 2016 (19:19 IST)
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா முறியடித்து உள்ளார்.
 
 
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆசிய துணைக்கண்டத்திலேயே குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார். அஸ்வின் 18 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 
இந்நிலையில், பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்த முதல் இன்னிங்ஸில் யாசிர் ஷா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
இதன் மூலம் 16 டெஸ்ட் போட்டி வரை 95 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த யாசிர் ஷா 100 விக்கெட்டுகள் என்ற சாதனையை படைத்தார். யாசிர் ஷா தனது 17 வது டெஸ்ட் போட்டியிலேயே 100 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார்.
 
ஆசிய கண்டத்திலே மிகக்குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்று அஸ்வின் பெற்றிருந்த சாதனையை யாசிர் ஷா தற்போது முறியடித்துள்ளார்.
 
அதேபோல் உலகளவில் குறைந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் சார்லி டர்னர், சையது பர்னஸ் மற்றும் கிளாரி கிரிம்மெட் ஆகியோருடன் இரண்டாம் இடம் பகிர்ந்துள்ளார்.
 
முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜார்ஜ் லாஹ்மேன் 16 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவர் இச்சாதனையை 1886ஆம் ஆண்டு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :