இறுதிப்போட்டியில் நுழையுமா இந்தியா?: உலகக் கோப்பை அரையிறுதியில் மே.இ.தீவுகள் அணியுடன் இன்று மோதல்

இறுதிப்போட்டியில் நுழையுமா இந்தியா?: உலகக் கோப்பை அரையிறுதியில் மே.இ.தீவுகள் அணியுடன் இன்று மோதல்


Caston| Last Modified வியாழன், 31 மார்ச் 2016 (11:32 IST)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 
 
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதவிருக்கும் மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இன்று மோதுகின்றன.
 
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில் விராட் கோலியும், மேற்கு இந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெயிலும் முக்கியமான வீரர்களாக இந்த போட்டியில் கருதப்படுகிறார்கள்.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கும் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக இன்றைய போட்டியில் ரஹானே அல்லது பவன் நெகி ஆகியோரில் ஒருவர் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.
 
இந்திய மண்ணில் நடக்கும் இந்த போட்டியில் ரசிகர்களின் ஆதரவு இந்தியாவுக்கு பலமாக உள்ளதாலும். தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதாலும். இந்த போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கெயிலின் புயல் வேக ஆட்டத்தை கட்டுப்படுத்தினால் இந்தியா வெற்றி பெறுவது எளிது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :