வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (18:08 IST)

’இந்தியாவுடன் தோற்ற இரவு சாப்பிடக்கூட இல்லை’ - வங்கதேச கேப்டன் மோர்தஸா

இந்தியாவுடனான போட்டியில் தோற்ற பிறகு அன்று இரவு சாப்பிடக்கூட இல்லை என்று வங்கதேச அணியின் கேப்டன் மஷ்ரஃபே மோர்தஸா கூறியுள்ளார்.
 

 
கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 10 சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
 
இதில் கொடுமை என்னவென்றால், கடுமையாக போராடிய வங்கதேச அணி வெற்றிபெற கடைசி மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.
 
இந்நிலையில், தனது விடுமுறையை செலவழிப்பதற்காக காஷ்மீர் சென்றுள்ள மோர்தஸா, அங்குள்ள உள்ளூர் இளைஞர்களிடம் உரையாடுகையில், “நாங்கள் அந்த தோல்வியால் உண்மையிலேயே நொந்துபோய் விட்டோம். நாங்கள் யாரும் இரவு உணவைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை.
 
தோல்வி என்பது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இந்தியாவுடனா அந்த போட்டியில் தோற்பதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.