’எனது நண்பர் சேவாக் என்னுடன் இணைகிறார்’ - சச்சின் டெண்டுல்கர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 28 அக்டோபர் 2015 (15:56 IST)
எனது நண்பர் சேவாக் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ‘ஆல் ஸ்டார்’ டி20 போட்டியில் என்னுடன் இணையவுள்ளார் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
 
 
சச்சின் மற்றும் வார்னே ஆகியோர் இணைந்து ’ஆல் ஸ்டார்’ கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில் நடத்துகின்றனர். இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ”சச்சின் பிளாஸ்டர்ஸ்” [Sachin's Blasters] அணியும், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையிலான “வார்னே’ஸ் வாரியர்ஸ்” [Warne's Warriors] அணியும் மோதுவுள்ளன.
 
இந்த போட்டியில், பிரையன் லாரா, வாசிம் அக்ரம், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்‌ஷ்மணன், அஜித் அகர்கர், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன், கிளைன் மெக்ரத், அனில் கும்ப்ளே, ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷாகித் அஃப்ரிடி, சானத் ஜெயசூர்யா உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
 
மூன்ற போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நவம்பர் மாதம் 7ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள சிட்டி ஃபீல்ட் மைதானத்திலும், 2ஆவது போட்டி நவம்பர் 11ஆம் தேதி ஹாஸ்டன் நகரிலுள்ள மினிட் மெய்ட் பார்க்கிலும், 3ஆவது போட்டி நவம்பர் 14ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டாட்ஜர் மைதானத்திலும் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில், சமீபத்தில் ஓய்வுபெற்ற இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் தற்போது ஆல் ஸ்டார் டி20 போட்டியில் இணையவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், ”எனது நண்பனும், தனித்துவ பாணியிலான விளையாட்டு வீரருமான வீரேந்திர ஷேவாக்கை அன்போடு வரவேற்கிறேன். வீரேந்திர ஷேவாக் இன்னும் பத்து நாட்களில் நடைபெறவுள்ள டி20 ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் எங்களுடன் இணைந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :