இலங்கைக்கு எதிரான டி20: விராட் கோலிக்கு ஓய்வு; பவன் நெஹிக்கு வாய்ப்பு


Ashok| Last Updated: திங்கள், 1 பிப்ரவரி 2016 (20:50 IST)
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோலிக்குப் பதிலாக டெல்லி அணியைச் சேர்ந்த பவன் நெஹி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
 
இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களில் பட்டியலை இந்திய கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்திய அணி ஆசிய கோப்பை டி20 போட்டிகளிலும், இலங்கை அணியுடன் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. பின்னர், வருகிற மார்ச் மாதம் மாதத்தில் உலக கோப்பை டி20 போட்டிகள் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இலங்கை அணியுடன் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வீரர்கள் ரிஷி தவன், குர்கீர்த் சிங், உமேஷ் யாதவர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புவனேஷ்குமார் மற்றும் பவன் நெகி மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
 
டி20 தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விவரம்:
தோனி (கேப்டன்), 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. ரகானே, 5. மணிஷ் பாண்டே, 6. சுரேஷ் ரெய்னா, 7. யுவராஜ் சிங், 8. ஹர்திக் பாண்டியா, 9. ரவீந்திர ஜடேஜா, 10. அஸ்வின், 11. பும்ரா, 12. ஆசிஷ் நெஹ்ரா, 13. ஹர்பஜன் சிங், 14. புவனேஸ்வர் குமார், 15. பவன் நெஹி


இதில் மேலும் படிக்கவும் :