1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (09:28 IST)

இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலிக்கு இடம் இல்லை!

இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலிக்கு இடம் இல்லை!

இந்தியாவின் கனவு டெஸ்ட் அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை.


 
 
இந்திய அணி பங்கேற்ற 500-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அபாரமாக வென்றது. இதனையடுத்து இந்தியாவின் கனவு டெஸ்ட் அணியை தேர்ந்தெடுக்க கிரிக்கெட் ரசிகர்களிடம் வாக்கெடுப்பை நடத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.
 
இந்த வாக்கெடுப்பில் ராகுல் டிராவிட் முதல் இடத்தையும், அனில் கும்ப்ளே இரண்டாம் இடத்தையும், கபில் தேவ் மூன்றாம் இடத்தையும், கேப்டன் தோனி நான்காம் இடத்தையும் பிடித்தனர்.

 
ஜாம்பவான் சச்சின்  8-வது இடத்தையே இதில் பிடிக்க முடிந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள இந்த கனவு அணியில்  இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனும், நடசத்திர வீரருமான  விராத் கோஹ்லி இடம்பெறவில்லை.