வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 24 டிசம்பர் 2014 (19:32 IST)

டிவிட்டரில் விராட் கோலி முதலிடம்; சச்சினுக்கு இரண்டாவது இடம்

சமூக வலைதளமான டிவிட்டரில் பின் தொடர்பவர்களில் விராட் கோலி முதலிடத்தையும், சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 
சமுக வலைதளமான டுவிட்டரில், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோலியின் பக்கத்தை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிகை 48 லட்சத்து 70 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டுவிட்டரில் அதிகமாக கவனிக்கப்படும் கிரிக்கெட் வீரர்களில் முதன்மையானவராக அவர் இருக்கிறார்.
 
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் 2ஆவது இடத்தில் உள்ளார். அவரை பின்பற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை 48 லட்சத்து 69 ஆயிரத்து 849 பேர் ஆகும்.
 
இந்திய கேப்டன் டோனியை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 27 ஆயிரத்து 033 ஆகும். அவர் இந்த வகையில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.