வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (17:54 IST)

22 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றி சாதனை; 117 வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றதன் மூலம், இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
 

 
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 312 ரன்களும், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களும் எடுத்திருந்தது. இந்நிலையில் 111 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2–வது இன்னிங்சில் 274 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணிக்கு 386 ரன் இலக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்கப்பட்டது.
 
பின்னர் விளையாடிய இலங்கை அணி 2–வது இன்னிங்சில் இலங்கை அணி நேற்று 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் கௌசல் சில்வா 24 ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
 
தோல்வியை தவிர்க்க மேலும் 318 ரன்கள் தேவை கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி இருந்தது. இந்நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியின் ஜோடியை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உமேஷ் யாதவ் பிரித்தார்.

சில்வா 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பின்னர் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழுந்து 264 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
 

 
இதன் மூலம், 117 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார். மேலும், தொடர் நாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த போட்டியில் புஜாரா 145 ரன்கள் எடுத்து இருந்தார். 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இந்தியா அணி விராட் கோஹ்லி தலைமையில் முதல் முறையாக இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 
 
22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா அணி கைபற்றியதன் மூலம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியா அணி கிரிக்கெட் ரசிகர்களின் கனவை நினைவாக்கி உள்ளது.
 
இதற்கு முன்பாக கடந்த 1993ஆம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது.