1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 2 ஜூன் 2016 (15:46 IST)

கோலிக்கு சச்சினின் சாதனையை முறியடிக்கும் தகுதி உண்டு - இளம் வயது பயிற்சியாளர்

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, முறியடிக்கு தகுதி விராட் கோலிக்கு உண்டு என்று கோலியின் இளம்வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.
 

 
விராட் கோலியின் பேட்டிங்கில் எந்தவித பலவீனத்தையும், தான் பார்க்கவில்லை என்று கூறியுள்ள சர்மா, உலகக்கோப்பை டி 20 போட்டி மற்றும் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் பொழுது, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கோலி அடுத்த கட்டத்தை அடைந்துவிடுவார் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், ”விராட் கோலி தற்போது உயர்ந்த நிலையில் உள்ளார். இந்திய வீரர்களில் தொடர்ச்சியாக நிலைத்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களில், விராட் கோலியை போல எவரும் இருந்ததாக எனக்கு நினைவில்லை.
 
ஏன் சர்வதேச அளவில்கூட விராட் கோலியை போல நிலையான ஆட்டத்தை, யாரும் வெளிப்படுத்தி பார்த்ததில்லை. தற்போதைய வழியிலேயே விளையாடும் பட்சத்தில், விராட் கோலி சச்சின் சாதனைகளை முறையடிக்கக் கூடிய சாத்தியங்கள் நிறைய உள்ளன” என்று கூறியுள்ளார்.