திங்கள், 17 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (10:50 IST)

இன்று ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டி! பரபரப்பான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்!

India pakistan

13வது ஐசிசி மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் பரபரப்பாக நடந்து வருகின்றது.

 

இதில் இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது வெற்றிக்காக ஆர்வமாக காத்திருக்கிறது. 

 

அதேசமயம் பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியிலேயே வங்கதேச அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியிலாவது வெல்ல வேண்டும் என முனைப்புடன் உள்ளது.

 

ஆனால் மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை 11 முறை எதிர்கொண்ட பாகிஸ்தான் இதுவரை ஒருமுறை கூட வெல்லவில்லை என்பதே வரலாறு. சமீபத்தில் ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி செய்தது ஆண்கள் அணி. அப்படியான ஒரு பதிலடியை இன்று மகளிர் அணியும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K