கேள்விகுறியாகும் ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் எதிர்காலம்

Mahalakshmi| Last Updated: திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (12:40 IST)
நடந்து முடிந்த இலங்கை டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் பெரிதாக சோபிக்காததால், அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர்களின் சுழற்பந்து வீச்சில் சிக்கி படுதோல்வியை சந்தித்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. வழக்கமாக அண்ணிய மண்ணில் பிரகாசிக்க முடியாமல் தோனி கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இதன் பின்னர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். 
 
இந்நிலையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டார். இதன்காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு நிகழ்ந்தது. ஆனால் நடந்தது என்னவோ நினைத்தற்கு மாறாக உள்ளது. வெறும் சொர்ப்ப ரன்களை கூட சேசிங் செய்ய முடியாமல் 63 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. 
 
இந்திய அணியின் தோல்விக்கு இலங்கை வீரர்களின் சுழல் பந்துவீச்சு முக்கிய பங்குவகுத்துள்ளது. இந்திய அணியும் சுழலில் தன் பங்கிற்கு ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. எனினும் இப்போட்டியில் மூத்த வீரர் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. 25 ஓவர்கள் பந்துவீசிய ஹர்பஜன் சிங் 90 ரன்களை வாரி இறைத்துள்ளார். ஆனால் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருப்பது வேதனையான விஷயம்தான். இதனால் இவரின் கிரிக்கெட் எதிர்காலம் சற்று கேள்விக்குறியாகியுள்ளது என்றால் மிகையல்ல.


இதில் மேலும் படிக்கவும் :