மூன்றாவது ஒரு நாள் போட்டி இந்தியா 295 ரன்: விராட் கோஹ்லி சதம்


Caston| Last Modified ஞாயிறு, 17 ஜனவரி 2016 (12:52 IST)
இந்தியா ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோஹ்லி 117 ரன் அடித்து அசத்தல்.

 
 
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பந்து வீச முடிவெடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் முதல் இரண்டு போட்டியிலும் சதம் விளாசிய ரோகித் சர்மா இந்த முறை 6 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி தவானுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.
 
91 பந்துகளுக்கு 68 ரன் அடித்த தவான் ஆட்டமிழக்க கோஹ்லியுடன் ரஹானே கூட்டு சேர்ந்தார். ரஹானே கோஹ்லி ஜோடி சிறப்பாக விளையாடியது. ரஹானே அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் 117 பந்துகளில் 117 ரன் அடித்து விராட் கோஹ்லியும் ஆட்டமிழந்தார்.
 
பின்னர் கடைசி நேரத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி 9 பந்துகளில் 2 ஃபோர் 2 சிக்ஸர்களுடன் 23 ரன் அடித்து ஆட்டமிழந்தார். கடைசியில் 295 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணிக்கு 296 இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.
 
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உள்ளனர். 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரில் முன்னனியில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :