செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2015 (20:32 IST)

”இந்தியா இதே வழியில் விளையாடினால் உலகக் கோப்பையை வெல்லும்” - சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணி இதே வழியில் விளையாடினால் உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவின் ’மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் டெண்டுல்கர், “என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு, தனி நபர்களின் விளையாட்டு அல்ல. இந்த நிலையில் கேப்டனாக இருப்பவர் சிறந்த முறையில் விளையாடவும் வேண்டும், வழிகாட்டவும் வேண்டும்.
 
சச்சின் டெண்டுல்கர்
களத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனாலும், சிறப்பான முறையில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வேண்டும். சரியான முறையில் பந்து வீச்சாளர்கள் பந்து வீச வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் மட்டுமே அணி வெற்றி பெற முடியும்.
 
நான் கேப்டனாக இருக்க அனுமதிக்கப்பட்ட  12 - 13 மாதங்களிலேயே அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டேன். இது என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. ஏனென்றால் நீங்கள் கேப்டனை தேர்ந்தெடுக்கும்போதே அவர் அணியை முன்னெடுத்துச் செல்வார் என்று நினைத்துதான் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
 
பிறகு அவருக்கு போதிய அவகாசம் கொடுக்கவில்லை என்றால், அவருடைய வெற்றி விகிதம் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். 4 ஆட்டங்களில் விளையாடினால் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியையும் பெறும் நிலைதான் ஏற்படும்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

எனது பதவி காலத்தில் போதுமான அவகாசம் அளிக்கவில்லை. இதை கடந்து செல்வது பெரிய ஏமாற்றமாக இருந்தது. அதுவும் அந்த சமயத்தில் சில கடினமான வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. மிகப்பெரிய அணியாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் மேற்கொண்டது.
 
தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற எண்ணற்ற சோதனைகளை நான் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
 
வெளிநாட்டு பயணத்தின்போது சச்சின், கங்குலி மற்றும் டிராவிட்
ஆனால் என்னுடைய அனுபவத்தில் ஒரு விஷயம் என்னவென்றால், 2011ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது நாங்கள் குறைந்த ரன்களே எடுத்ததாலும், அதிக ரன்களை எதிரணியினருக்கு விட்டுக்கொடுத்ததாலும் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தோம்.
 
அதேபோல்தான் எனது தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும் எங்களால் அதிக ரன்களையும் குவிக்க முடியவில்லை, 20 விக்கெட்டுகளை முழுமையாக கைப்பைற்றவும் இல்லை. இதனால் நாங்கள் 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்தோம்.
 
தற்போதுள்ள இந்திய அணி இதே வழியில் விளையாடினால் உலகக்கோப்பையை வெல்லமுடியும். இந்த அணியால் நான் மிகவும் கவரப்பட்டுள்ளேன். அவர்களுடைய பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் எல்லாமுமே அற்புதமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.