இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு செக்ஸ் டார்சர்: தப்பித்த உயர் அதிகாரிகள்

Mahalakshmi| Last Updated: வியாழன், 28 மே 2015 (10:58 IST)
இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு செக்ஸ் டார்சர் கொடுத்த 3 பேர் மீதும், போதிய ஆதாரம் இல்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு ஆதரவாக பல சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டாலும், இன்னும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தீர்ந்தபாடில்லை. அவற்றுக்கு ஒரு சான்றாய் விளங்குகிறது இலங்கை வீராங்கனைங்களில் நிலைமை.
ஆம் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைங்கள் அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என 3 அதிகாரிகள் செக்ஸ் டார்சர் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க இலங்கை அரசோ ஒரு கமிட்டியை நியமித்து விசாரணையை தொடங்கியது. 
 
இந்த விசாரணை முடிவில் 3 அதிகாரிகள் மீது செக்ஸ் புகார் எழுந்தாலும் அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது அந்த 3 அதிகாரிகளும் உரிய பதவிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :