35 பந்துகளில் 15 ரன் எடுத்து தோனி சொதப்பல்; 249 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 9 ஜனவரி 2016 (16:26 IST)
இந்தியா - மேற்கு ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.1 ஒவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.
 
 
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முன்னதாக பயிற்சி ஆட்டமாக ஒரு டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டி ஒன்றிலும் விளையாடி வருகிறது.
 
நேற்று நடைபெற்ற டி 20 பயிற்சி போட்டியில், இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பயிற்சி ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
 
அதன் படி களமிறங்கிய இந்திய 49.1 ஒவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 4 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மா 67 ரன்களும், ரஹானே 41 ரன்களும், மணீஷ் பாண்டே 58 ரன்களும் எடுத்தனர்.
 
கேப்டன் மகேந்திர சிங் தோனி 35 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆல் ரவுண்டார் ரவீந்திர ஜடேஜா கடைசி கட்டத்தில் 26 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ட்ரீவ் போர்ட்டர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.


இதில் மேலும் படிக்கவும் :