உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு: அப்ரிடி திடீர் அறிவிப்பு

உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு: அப்ரிடி திடீர் அறிவிப்பு
Mahalakshmi| Last Updated: திங்கள், 22 டிசம்பர் 2014 (13:41 IST)
பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான அப்ரிடி, வரும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், நல்ல நிலையில் இருக்கும்போதே ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும். அதற்கு இதுதான் சரியான தருணமாகும். பின்னர் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்துவேன் என்றார். மேலும் அடுத்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது என் ஆசையாகும் என்று கூறியுள்ளார்.
 
மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கு வலுமையான பாகிஸ்தான் அணியை உருவாக்குவேன் என்றார். இதுவரை  389 போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி, அதில் 7870 ரன்கள் அடித்ததுடன் 391 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :