1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2015 (11:45 IST)

சிறந்த டெஸ்ட் அணிக்கு சேவாக்தான் ஓப்பனிங் - வார்னே அறிவிப்பு

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியில் சேவாக்கிற்கு முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே அளித்துள்ளார்.
 

 
ஷேன் வார்னே தான் எதிர்கொண்ட கிரிக்கெட் வீரர்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளின் சிறந்த 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
அதனடைப்படையில் இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் கொண்ட டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவக்கிற்கு தொடக்க வீரருக்கான இடத்தை அளித்துள்ளார். 2ஆவது வீரராக நவ்ஜோத் சித்துவை குறிப்பிட்டுள்ளார்.
 
ராகுல் டிராவிட்டிற்கு 3ஆவது இடத்தையும், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு 4ஆவது இடத்தையும் வார்னே அளித்துள்ளார்.
 
ஆனால், 6ஆவது இடத்தை விவிஎஸ்.லெட்சுமன்னுக்கு அளிப்பதா? இல்லை அஷாருதினுக்கு அளிப்பதா? என்று குழப்பமான நிலை ஏற்பட்டதாக வார்னே கூறியுள்ளார்.
 
தான் சந்தித்த அணிகளில், பல திறமையான வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வதுதான் கடினமாக இருந்தது. வெங்கர்கார், சஞ்சய் மஞ்சரேகர், ரவி சாஸ்திரி, மனோஜ் பிரபாகர் மேலும் சமீபத்திய வீரர் ஜாகிர் கான் உட்பட பலரும் தனது பரிசீலனையில் இருந்ததாக வார்னே குறிப்பிட்டுள்ளார்.
 
வார்னே தேர்வு செய்துள்ள சிறந்த டெஸ்ட் அணி வீரர்கள்:
 
வீரேந்தர் சேவாக், நவ்ஜோத் சித்து, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி முஹமது அஷாருதின், கபில்தேவ், மகேந்திர சிங் தோனி, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜவஹல் ஸ்ரீநாத், விவிஎஸ் லெட்சுமணன் [12ஆவது வீரர்].