துணை அமைச்சர் ஆனார் முன்னாள் இலங்கை கேப்டன் ஜெயசூர்யா


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 12 ஜூன் 2015 (18:58 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா சிறிசேனவின் அமைச்சரவையில் துணை அமைச்சராக இணைக்கப் பட்டுள்ளார்.
 
 
இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான ஜெயசூர்யா, 1996ஆம் ஆண்டு இலங்கை உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
 
முந்தைய மகிந்த ராஜபக்சே அரசில் துணை அமைச்சராக பதவி வகித்துவந்த ஜெயசூர்யா, தனது சொந்த மாவட்டமான மாத்தறையில் இருந்து 2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 74 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார்.
 
இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அரசில் ஜெயசூர்யாவுக்கு துணை மந்திரி பதவி கிடைத்துள்ளது. அவர் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இவர் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
 
சிறிசேனா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த 4 பேர் சமீபத்தில் பதவி விலகி ராஜபக்சேவுடன் இணைந்தனர். அந்த இடத்தை நிரப்புவதற்காக ஜெயசூர்யாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :