வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (14:08 IST)

சச்சின் டெண்டுல்கர் என்னைக்கண்டு ஓடப்போகிறார் - மைக் ஹஸ்ஸி வேடிக்கை!

நடப்பு ஐபிஎல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடும் மைக் ஹஸ்ஸி, கிரிக்கெட், வாழ்க்கை, ஓய்வு பெற்றபிறகு வாழ்க்கை என்று கேள்விகளால் சச்சின் டெண்டுல்கரைத் துளைக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
 
மேலும் இந்த ஐபிஎல் தொடர் முடியும் தறுவாயில் சச்சின் என்னைப்பார்த்தாலே ஓடிவிடப்போகிறார் என்று மைக் ஹஸ்ஸி வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.
 
"ஆம் நான் சச்சினுடன் சில மணி நேரங்கள் செலவழிக்கலாம் என்று நினைத்துள்ளேன், வாழ்க்கை, கிரிக்கெட், ஓய்வு பற்றி அவரிடம் கேட்கப்போகிறேன் கூடிய சீக்கிரம் அவர் என்னைக்கண்டாலே ஓடிவிடப்போகிறார்" என்று கூறியுள்ளார் மைக் ஹஸ்ஸி.
 
"இந்த முறை வித்தியாசமான உடை, இந்த 6 ஆண்டுகளில் நான் மதிக்கும் ஒரு அணி மும்பை அந்த அணியில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
 
நான் எனது உடற்தகுதியில் கவனம் செலுத்துகிறேன், ஆஸ்ட்ரேலியாவின் பிக் பாஷ் லீகிலும் ஆடி வருகிறேன், மும்பை இந்தியன்ஸுடன் கடந்த காலங்களில் நிறைய போட்டிகளில் எதிர்த்து ஆடியுள்ளேன், இந்த முறை எனது முந்தைய அணியான சென்னையை எதிர்த்து நிறைய விளையாடுவேன் என்று எதிர்பார்க்கலாம்.
 
வயதாக வயதாக T20 கிரிக்கெட் நன்றாகவே உள்ளது.
 
இவ்வாறு கூறினார் மைக் ஹஸ்ஸி.