வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 15 ஜனவரி 2016 (12:35 IST)

ரோகித், ரஹானே அபாரம்: இந்தியா 308 ரன்கள் குவிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பிர்ஸ்பேனில் இன்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அனி 308 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா, அஜிங்கியா ரஹானே அபாரமாக ஆடி இந்திய அணியை சிறப்பான இலக்கை நிர்ணயிக்க உதவினர். ஆஸ்திரேலிய அணிக்கு 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.


 
 
ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் தோல்வியை தழுவிய இந்திய அணி, இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற காட்டாயத்தில் களம் இறாங்கியுள்ளது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல தவான் சொற்ப ரன்னில் வெளியேறினாலும் ரோகித், கோஹ்லி ஜோடி சிறப்பாக ஆடினர்.
 
விராட் கோஹ்லி 59 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித், கோஹ்லி ஜோடி 125 ரன்கள் சேர்த்தது. பின்னர் கூட்டு சேர்ந்த ரோகித், ரஹானே ஜோடி 121 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 124 ரன்கள் சேர்த்து ரன் அவுட் மூலம் வெளியேறினார். விராட் கோஹ்லியும் ரன் அவுட் மூலமே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் தோனி 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
சிறப்பாக விளையாடி 80 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்த ரஹானே அணியின் எண்ணிக்கை 298 ரன்னில் இருக்கும் போது ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பாண்டேயும் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
 
50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்து 309 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
 
ரோகித், கோஹ்லி, ரஹனே ஆகியோர் தவிர மற்ற அனைவரும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இன்றைய ஆட்டத்தில் 3 பேர் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தனர்.