வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2015 (19:32 IST)

’சரியாக ஆடாத இந்திய அணியைதான் குற்றம் சொல்ல வேண்டும்’ - வினோத் காம்ப்ளி

சரியாக ஆடாத இந்திய அணியைதான் குற்றம் சொல்லாமல் பிட்ச் பராமரிப்பாளரை ஏன் ரவி சாஸ்திரி குறை சொல்கிறார் என்று முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை [25-10-15] அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 214 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்று தொடரையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
அதற்கு முன்னதாக முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் 109 (86), ஃபாப் டு பிளஸ்ஸி 133 (115), ஏபி டி வில்லியர்ஸ் 119 (61) என விளாசி தள்ளினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 438 ரன்கள் குவித்தது.
 

 
இந்நிலையில், இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளரான சுதிர் நாயக்கை திட்டியதாக அவர் மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளார்.
 

 
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்பிளி, “மிஸ்டர் ரவி சாஸ்திரி, மிகுந்த மரியாதைக்குரிய ஆடுகள வடிவமைப்பாளரையும், ஏன் ஆடுகளத்தையும் குறை சொல்கிறீர்கள்?
 
சரியாக விளையாடாத இந்திய அணியைக் குறை சொல்ல வேண்டியதுதானே. விரக்தியடைந்த நிலையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.
 
அதேபோல மற்றொரு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், “வான்கடே மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளரான சுதிர் நாயக்கை ரவி சாஸ்திரி முழுவதுமாக எல்லை தாண்டி விமர்சித்துள்ளார். இது முன்னாள் கிரிக்கெட் வீரரின் வயதிற்கு அளிக்க வேண்டிய மரியாதை அவமதிப்பை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.