1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2016 (16:37 IST)

பூணம் பாண்டே விராட் கோலிக்கும், இந்திய அணிக்கும் ’கவர்ச்சி’ பரிசு

ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணிக்கும், ஆட்டநாயகன் விருதுபெற்ற விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை பூணம் பாண்டே தனித்தனியாக கவர்ச்சிப் பரிசு அளித்துள்ளார்.
 

 
கடந்த ஞாயிற்றுக்கிழமை [27-03-16] அன்று மொஹாலியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
 
வாழ்வா, சாவா என்ற நிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் தனி ஆளாக நின்று விராட் கோலி போட்டியை வென்று கொடுத்தார். இந்த ஆட்டத்தில் விராட் கோலி 51 பந்துகளில் [9 பவுண்டரி, 1 சிக்ஸர்] 82 ரன்கள் எடுத்தார்.
 
இந்நிலையில், பாலிவுட் நடிகை பூணம் பாண்டே ஆஸ்திரேலியாவை வெற்றி கண்ட இந்திய அணிக்கும், ஆட்டநாயகன் விருதுபெற்ற விராட் கோலிக்கும் தனித்தனியாக கவர்ச்சிப் பரிசு அளித்துள்ளார்.
 

 
இது குறித்து தனது ட்விட்டரில் இரண்டு பதிவுகளை பதிவிட்டுள்ளார். முதல் பதிவு இந்திய அணிக்கு என்று குறிப்பிட்டுள்ள பூணம் பாண்டே, ”என்ன ஒரு ஆட்டம்! நீங்கள் எப்போதுமே அசத்தலானவர்கள்தான். எனது பாணியில் ஒரு பரிசு” என்று கூறியுள்ளார்.
 
“விராட் இது உங்களுக்கு” என்று மற்றொரு பதிவையும், புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
 

 
முன்னதாக, கடந்த வாரம் புதன்கிழமை [23-03-16] அன்று உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 10 சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
 
அப்பொழுதும், வங்கதேச அணியை வென்ற இந்திய அணிக்கு பாலிவுட் நடிகை பூணம் பாண்டே, தனது ட்விட்டர் பக்கத்தில் ’சிறிய பரிசு’ என்று கூறி கவர்ச்சி படத்தை பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.