இந்தியா வெற்றி பெற 243 ரன்கள் இலக்கு


Abimukatheesh| Last Updated: வியாழன், 20 அக்டோபர் 2016 (17:46 IST)
நியூசிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. 

 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இன்று டெல்லியில் 2வது ஒருநாள் போட்டி நடைப்பெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் குவித்தது. 
 
அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் சதம் விளாசினார். 128 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். முதல் போட்டியில் எளிதில் சுருண்ட நியூசிலாந்து அணி இந்த முறை சற்று கடினமான ரன்களை இந்திய அணி இலக்காக வைத்து நெருக்கடி கொடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :