நாதன் மெக்கல்லம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 31 அக்டோபர் 2015 (18:01 IST)
நியூசிலாந்து அணியின் வீரர் நாதன் மெக்கல்லம் [35] இந்த சீசனுடன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் கூறுகையில், “ஓய்வுபெறுதில் பெரிய ஆடம்பர நடனங்களே, பாட்டுகளோ இடம்பெறுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்வதற்கு இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.
 
மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதற்கு இந்த சீசன் சரியான நேரம் என்பதை புரிந்து வைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 
தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க நேரம் ஒதுக்க ஆர்வமாக இருப்பதாக மெக்கல்லம் கூறியுள்ளார்.
 
இது குறித்து கூறுகையில், ”கடந்த 5 ஆண்டுகளில் வனீஸா [மெக்கல்லமின் மனைவி] மிகவும் சிரமப்பட்டு வருகிறார். அவர் கர்ப்பமுற்றதில் இருந்து, இதை தனது பணியாக செய்து வருகிறார்.
 
குழந்தைகளுக்கு இரவு உணவு சமைப்பதற்கும், அவர்களின் வீட்டுப்பாடம் செய்ய உதவு புரிவதற்கும், குடும்பத்துடன் நேரம் செலவிடவதற்கும் இதுவே சரியான தருணம்” என்று கூறியுள்ளார்.
 
இதுவரை நாதன் மெக்கல்லம் 84 ஒருநாள் போட்டிகளில் [62 இன்னிங்ஸ்] விளையாடி 1070 ரன்கள் குவித்துள்ளார். அதில், 4 அரைச்சதங்களும், 63 விக்கெட்டுகளும், 41 கேட்சுகளும் அடங்கும்.


இதில் மேலும் படிக்கவும் :