நியூசிலாந்து வீரர் வீசிய பந்து: தலையில் பட்டு நிலைகுலைந்த வங்கதேச கேப்டன்


bala| Last Modified திங்கள், 16 ஜனவரி 2017 (13:14 IST)
நியூசிலாந்து வீரர் வீசிய பந்து வங்கதேச வீரரின் தலையில் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

வெலிங்டனில் நியூசிலாந்து-வங்கதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5வது நாளான இன்று வங்க தேச அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. அப்போது நியூசிலாந்து வேகப்பந்து வீரர் சவுத்தி வீசிய பந்து வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர் ரகீம் ஹெல்மெட்டில் பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு அனைத்து வகையான பரிசோதனைகளும்  செய்யப்பட்டன. அதில் லேசான காயம் மட்டுமே இருந்ததால் சிறிது நேரத்திற்கு பின் வீடு திரும்பினார்.


இதில் மேலும் படிக்கவும் :