வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 26 மார்ச் 2016 (15:37 IST)

தோல்விக்கு பிறகு மஹ்மதுல்லாவிடம் தோனி என்னதான் சொன்னார்?

இந்திய அணியிடம் வங்கதேச அணி தோல்வி அடைந்த பிறகு, அந்த நாட்டு வீரர் மஹ்மதுல்லாவிடம் பேசிய விஷயம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் மஹ்மதுல்லா பகிர்ந்துள்ளார்.
 

 
கடந்த புதன்கிழமை [23-03-16] அன்று உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 10 சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
 
இதில் கொடுமை என்னவென்றால், கடுமையாக போராடிய வங்கதேச அணி வெற்றிபெற கடைசி மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் மூன்று பந்துகளில் 2 மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.
 
முஸ்பிகுர் ரஹீம் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, மஹ்மதுல்லா ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி பந்தில் முஸ்டபிஷுர் ரஹ்மான் ரன் அவுட் ஆனார்.
 
வங்கதேசம் தோல்வி அடைந்த பிறகு, அந்த நாட்டு வீரர் மஹ்மதுல்லாவிடம் தோனி ஏதோ சொன்னார். அவர் பேசிய விஷயம் குறித்து மஹ்மதுல்லா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

 
அதில், “பெரிய ஷாட்கள் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க நினைக்கும்போது, பெரும்பாலும் இப்படிதான் நிகழும். நீங்கள் கையில் விக்கெட்டுகள் இருப்பதாக நினைத்தால், மற்றவர்கள் ஆட்டத்தை முடித்து வைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.
 
நீங்கள் அப்பொழுது நன்றாக விளையாடிக் கொண்டிருந்தீர்கள். உங்களுக்கான ஷாட்களை அடித்துக் கொண்டிடுந்தீர்கள். இது மஹ்மதுல்லாவிற்கு ஒரு பாடம்தான். இது கிரிக்கெட் பற்றி அனைத்துயும் சொல்கிறது.
 
ஒருவேளை அது சிக்ஸருக்கு போயிருந்தால், அது பெரிய ஷாட்டாக ஆயிருக்கும். மிகப்பெரிய தைரியம். இதுதான் கிரிக்கெட். அப்போது இப்படித்தான் முடிவு செய்திருப்பீர்கள் என்று, நீங்கள் அந்த ஷாட்டை அடிப்பதற்கு முன்பாகவே உணர்ந்தேன்” என்று தோனி தெரிவித்ததாக கூறியுள்ளார்.