அதிக ரன் அடித்து சரித்திர சாதனை படைத்தார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்!

அதிக ரன் அடித்து சரித்திர சாதனை படைத்தார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்!


Caston| Last Modified புதன், 12 ஜூலை 2017 (17:30 IST)
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதி வருகின்றன.

 
 
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய வரலாற்று சாதனையை படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
 
இங்கிலாந்தின் பிரிஸ்டலில் 23-வது லீக் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
 
கேப்டன் மிதாலி ராஜ் 34 ரன்கள் எடுத்த போது பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸின் சாதனையை முறியடித்தார். சார்லட் 5992 ரன்களுடன் இதுவரை முதலிடத்தில் இருந்தார். ஆனால் அவரை தற்போது இந்தியாவின் மிதாலி ராஜ் பின்னுக்கு தள்ளிவிட்டார்.
 
மேலும் மிதாலி ராஜ் 41 ரன் எடுத்த போது 6000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார் அவர்.


இதில் மேலும் படிக்கவும் :