வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2015 (09:19 IST)

மெக்கல்லம் டக் அவுட்; நியூசிலாந்து அதிர்ச்சி தொடக்கம்

உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் டக் அவுட் ஆகி அதிர்ச்சி தொடக்கம் அளித்துள்ளார்.
 
உலக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
 

 
அதன்படி முதலில் மார்டின் கப்திலும், பிரண்டன் மெக்கல்லமும் களமிறங்கினர். மெக்கல்லம் சந்தித்த 2ஆவது பந்தை அடித்து ஆட முயற்சித்தார். ஆனால், ஸ்டார்க் அற்புதாமாக அதை லெக் சைடில் வீசி கட்டுப்படுத்தினார். ஆனால் அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
 
முதல் ஓவரிலேயே அவுட்டானது அதிர்ச்சிகரமாக அமைந்தது. 3 ஓவர்களுக்கு 11 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் கப்திலும், வில்லியம்சனும் ஆடி வருகின்றனர்.