வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 1 மே 2015 (13:45 IST)

சென்னையை பழிக்குப் பழி வாங்கிய கொல்கத்தா; 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

8ஆவது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணியை பழிக்குப் பழி வாங்கியது.
 
நேற்று வியாழக் கிழமை [30-04-15] 8ஆவது ஐபிஎல் போட்டியின் 30ஆவது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
 

 
அதன்படி, முதலில் களிமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அந்த அனியின் அதிரடி வீரர் டுவைன் ஸ்மித் தனது முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் பிரண்டன் மெக்கல்லமும், சுரெஷ் ரெய்னாவும் அதிரடியாகவே ஆடினர்.
 
ஆனால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத ரெய்னா 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய டு பிளஸ்ஸியும் அதிரடியாகவே ஆடினார். அதிரடியாக ஆடிய மெக்கல்லம் 12 பந்துகளை 32 ரன்களிலும், 11 பந்துகளை சந்தித்த டு பிளஸ்ஸி 20 ரன்களும் எடுத்து வெளியேறினார்.
 

 
டுவைன் பிராவோ 32 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தினார். கேப்டன் தோனி 4 பந்துகளில் 1 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். ரவீந்திர ஜடேஜா 24 ரன்களும், நெகி 27 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கள்மிறங்கிய ராபின் உத்தப்பா மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் இணைந்து ஓரளவு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அணியின் எண்ணிக்கை 33ஆக இருந்தபோது கவுதம் கம்பீர் 19 ரன்களில் வெளியேறினார். அடுத்து கள்மிறங்கிய மணீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் இருவரும் 3, 2 ரன்களில் வெளியேறினார்.
 
இதனால் கொல்கத்தா அணி 57 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை சென்னை அணி சாதகமாக பயண்படுத்திக் கொள்ள தவறியது. அடுத்து ஆண்ட்ரே ரஸ்ஸல் கள்மிறங்கினார். அவர் ஆரம்பம் முதலே அதிரடியாகவே ஆடினார்.
 

 
முதலில் ராபின் உத்தப்பா அரைச்சதத்தைக் கடந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரே ரஸ்ஸலும் அரைச்சதம் கடந்தார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
ராபின் உத்தப்பா 58 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல் 32 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். ஆட்ட நாயகன் விருது ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன் கொல்கத்தாவுடனான போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு தற்போது கொல்கத்தா பழி தீர்த்துவிட்டது.