வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2015 (20:16 IST)

”உலகத்திலேயே டி வில்லியர்ஸுக்கு பந்து வீசுவதுதான் கடினமானது” - மிட்செல் ஜான்சன்

உலகத்திலேயே டி வில்லியர்ஸுக்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
 
8ஆவது ஐபிஎல் இன்று [08-04-15] புதன்கிழமை தொடங்குகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ளார். பயிற்சிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஜான்சன் இவ்வாறு குறிப்பிட்டார்.
 

 
இது குறித்து அவர் கூறுகையில், ”உலகத்திலேயே டி வில்லியர்ஸுக்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று நினைக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் மிகச்சிறப்பான வீரராக திகழ்ந்து வருகிறார்.
 
எனக்கும், என்னை போன்ற பல வீரர்களுக்கும் டி வில்லியர்ஸுக்கு பந்து வீசும் சவாலான விஷயம். அந்த சவாலான விஷயத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். ஆனாலும், டி-20 போட்டிகளில், எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்தான்” என்றார்.