வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 14 அக்டோபர் 2015 (17:37 IST)

தோனியால் தப்பியது இந்திய அணி; தென் ஆப்பிரிக்காவிற்கு 248 ரன்கள் இலக்கு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
கடந்த போட்டியில் 150 ரன்கள் எடுத்து அசத்திய ரோஹித் சர்மா 3 ரன்களில் ரபாடா பந்தில் ஸ்டெம்புகள் சிதற வெளியேறினார். பின்னர் இணைந்த தவான், ரஹானே ஜோடி மெதுவாக ரன் குவித்தது. இந்த ஜோடி 56 ரன்கள் குவித்தது.
 
தவான் 23 ரன்களில் வெளியேற, விராட் கோலி களமிறங்கினார். ஆனால், அவரை தேவையில்லாமல் ரஹானே, ரன் அவுட் ஆக்கி வெளியேறினார். ஒரு முனையில் இருந்த கோலி ஓடிவர, மறுமுனையில் ரஹானே சைகை செய்ய அதை பார்க்காமல் கோலி ஓடி வந்தார்.
 
இதனால் விராட் கோலி 12 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து தோனி களமிறங்கினார். அரைச்சதம் கடந்த ரஹானே 52 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரெய்னா 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
 
இதனையடுத்து களமிறங்கிய அக்ஷர் பட்டேல் மற்றும் புவனேஷ்குமார் தலா 13 ரன்கள் எடுத்து வெளியேறினர். அப்போது இந்திய அணியின் எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் என்றிருந்தது. இதனால், இந்திய அணி 200 தாண்டுவதே சிரமம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
 
அதன் பிறகு ஹர்பஜன் சிங், தோனியுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி அடித்து விளையாடியது. இதனால், அணியின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. தோனி 57 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார்.
 
ஹர்பஜன் சிங் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த இணை 56 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் வந்த உமேஷ் யாதவ் 4 ரன்களில் வெளியேறினார்.
 
கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்த தோனி 86 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெய்ன் 3 விகெட்டுகளையும், ரபாடா, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.