செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2015 (15:52 IST)

தென் ஆப்பிரிக்காவின் போராட்டம் தகர்ந்தது: இந்தியா வரலாற்று வெற்றி

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிராக்காவை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.


 
 
72 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்புடன் இன்றைய 5 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா அணி 143 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
 
போட்டியை டிரா செய்யும் நோக்கில் ஆரம்பம் முதலே கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட தென் ஆப்பிரக்க அணியின் முயற்சியை இந்திய வீரர்கள் அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ் தகர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.
 
தோல்வியை தவிர்ப்பதற்காக தென் ஆப்பிரிக்காவின் அம்லா, டிவில்லியர்ஸ் நேற்றிலிருந்தே தடுப்பாட்டத்தில் இட்டுபட்டு சில மோசமான சாதனைகளும் படைத்தனர். இன்றைய ஆட்ட தொடக்கத்திலிருந்தே அதே தடுப்பாட்ட ஊத்தியை இருவரும் தொடர்ந்தனர்.
 
244 பந்துகளில் 25 ரன்களை மட்டுமே எடுத்த அம்லாவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா. பின்னர் களமிறங்கிய டுபிளெஸிஸ் டிவில்லியர்ஸ் உடன் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார் அவர் தனது முதல் ரன்னை 53 வது பந்தில் தான் எடுத்தார். அவரையும் ஜடேஜா வீழ்த்த பின்னர் வந்த டுமினி அஸ்வின் பந்து வீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
 
வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விலஸ் விக்கெட்டை வீழ்த்த, நேற்றிலிருந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிவில்லியர்ஸின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் டிரா செய்யும் கனவை தவிடு பொடியாக்கினார் 297 பந்துகளை சந்தித்த டிவில்லியர்ஸ் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
 
பின்னர் களமிறங்கியாவர்களை இந்திய பந்து வீசாளர்கள் வரிசையாக பெவிலியன் அனுப்பினர். இந்தியா தரப்பில் 49.1 ஓவர்கள் வீசிய அஸ்வின் 26 மெய்டன் ஓவர்களுடன் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 21 ஓவர்களை வீசிய உமேஷ் யாதவ் 16 மெய்டன் ஓவர்களுடன் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 46 ஓவர்களை வீசி 33 மெய்டன் ஓவர்களுடன் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ரஹானே தனது ஆட்ட நாயகன் விருதை கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்தார். டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.