இந்தியா அணி சிறப்பான ஆட்டம்: ரோகித் சர்மா அதிரடி


Caston| Last Modified வெள்ளி, 15 ஜனவரி 2016 (12:03 IST)
இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒரு நாள் போட்டி பிர்ஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. வழக்கம் போல தவான் சொற்ப ரன்னில் வெளியேறினாலும் ரோகித், கோஹ்லி ஜோடி சிறப்பாக ஆடினர்.

 
 
விராட் கோஹ்லி 59 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித், கோஹ்லி ஜோடி 125 ரன்கள் சேர்த்தது. பின்னர் கூட்டு சேர்ந்த ரோகித், ரஹானே ஜோடி 121 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 124 ரன்கள் சேர்த்து ரன் அவுட் மூலம் வெளியேறினார். விராட் கோஹ்லியும் ரன் அவுட் மூலமே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் தோனி 11 ரன்னில் ஆட்டமிழந்தார்
 
ரஹானே 70 ரன்னுடனும், மனிஷ் பாண்டே 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 277 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி 300 ரன்களை தாண்டும் என்பதில் சந்தேகமில்லை.


இதில் மேலும் படிக்கவும் :