வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (16:16 IST)

தென் ஆப்பிரிக்க தொடரை இழந்த இந்தியா: தோனியை சாடும் முன்னாள் வீரர்கள்

தென் ஆப்பிரிக்க ஆணியுடனான இருபது ஓவர் போட்டியின் தொடர் தோல்விக்கு பல காரணங்களை இந்திய கேப்டன் தோனி கூறினாலும், முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் ஆகியோர் தோனியின் செயல்பாட்டை விமர்சித்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று இருபது ஓவர், 5 ஒரு நாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலிரண்டு இருபது ஓவர் போட்டிகளிலும் வென்று தென் ஆப்பிரிக்க அணி டி-20 தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது

இந்நிலையில் இருபது ஓவர் தொடரில் மோசமாக விளையாடி தொடரை இழந்ததால், இந்திய கேப்டன் டோனி மீது விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், திறமையான வீரர்களை தேர்வு செய்யாதது குறித்தும் கண்டனங்கள் வருகின்றன.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ரகானேவை தேர்வு செய்யப்படாமல் இருந்தது ஆச்சரியமானதாக உள்ளது, அவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் ஆவார். விக்கெட்டுகள் விழுந்து விட்டால் அதற்கு ஏற்றவாறு ஆடக்கூடியவர். ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர். திறமை வாய்ந்த பேட்ஸ்மேனான அவருக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் போட்டியின் இரண்டு ஆட்டத்திலும் வாய்ப்பு கொடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இதேபோல இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கரும் தோனியின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.