வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2016 (12:08 IST)

மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் இந்திய - வங்கதேசம் மோதல்

பெங்களூரில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  இன்று தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாட உள்ளது.


 
 
இதற்கு முன்பாக, இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 2 முறை அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. கடந்த இரு உலகக் கோப்பைகளில் குரூப் சுற்றை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துடன் மோதுகிறது.
 
இந்த முறை மகளிர் உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் "ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.
 
 "பி' பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது