2 ஆவது இடத்தை தக்கவைத்தது இந்திய அணி

Mahalakshmi| Last Modified வெள்ளி, 17 ஜூலை 2015 (12:56 IST)
ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் மீண்டும் 2 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது இந்திய அணி.
சமீபத்திய ஜிம்பாப்வே தொடரை வாஷ் அவுட் செய்ததால் தொடர்ந்து 2 ஆவது இடத்தை  தக்கவைத்துள்ளது இந்திய அணி. டாப் இடத்தை ஆஸ்திரேலியாவும், 3 ஆவது இடத்தை நியூசிலாந்து அணியும் இடம்பெற்றுள்ளன.
 
மேலும் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில்  கோலி 4 ஆவது இடத்திலும், தொடக்க ஆட்டக்காரர் தவான் 7 ஆவது இடத்திலும் , கேப்டன் தோனி முறையே 9 ஆவது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சு பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10 இடத்தில் ஒரு இந்திய பந்துவீச்சாளரும் இல்லாதது சற்று ஏமாற்றமே!


இதில் மேலும் படிக்கவும் :