வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (21:48 IST)

”என்னுடைய தகுதி எனக்குத் தெரியும்” - ரஹானே

என்னுடைய தகுதி எவ்வளவு என்று எனக்குத் தெரியும் என்று ஜிம்பாப்வேவிற்கு எதிராக களமிறங்கவுள்ள இந்திய அணி தலைமை பொறுப்பேற்றுள்ள ரஹானே கூறியுள்ளார்.
 

 
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டி20 கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு அறிவித்தது. இதில் இந்திய அணியின் கேப்டனாக அஜிங்கே ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மேலும் முன்னனி வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியில் முரளி விஜய், அம்பதி ராயுடு, மனோஜ், கெடர், ராபின் உத்த்ப்பா, மனிஷ் திவாரி, ஹர்பஜன் சிங், அக்ஷர் படேல், தவல் குல்கர்னி, ரோஜர் பின்னி, புவனேஷ்குமார், ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
 
இந்நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கூறிய ரஹானே, “என்னுடைய தகுதி எவ்வளவு என்று எனக்குத் தெரியும். மேலும், என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
 
நான் கேப்டன்சி குறித்து சிந்திக்கவில்லை. அதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. ஆனால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தன்னம்பிக்கையோடு விளையாடியதை அடுத்து, எனக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நான் கடினமாக போராடக்கூடியவன். நான் எப்போதுமே உலகில் சிறந்தவனாக இருக்க விரும்புவன். எனது தகுதி குறித்தும் தெரியும். தோனியின் கீழ் விளையாடிய பொழுது களத்தில் அவர் ஒவ்வொன்றையும் கையாளும் விதத்தில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.