வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (15:19 IST)

’எனது மகளுக்கு என்னை அடையாளம் தெரியாது’ - தோனி

எனது மகள் ஜிவா என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று நினைக்கவில்லை என்று இந்திய ஒருநாள் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.


 

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
இந்நிலையில் அடுத்ததாக வருகின்ற அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே பங்கேற்க உள்ளார். எத்தகைய கிண்டலான கேள்விக்கும் கேள்விக்கும் நகைச்சுவையாக பதிலளிக்கும் தோனி ஜிம்பாப்வே தொடருக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய தோனி, ”நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த தொடருக்கு பின்னர்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வில் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறேன். எனது 15 மாத மகள் ஜிவா என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று நினைக்கவில்லை.
 
எனவே, எனது மகளுக்கு நான்தான் அவளது மகள் என்று உணர வைக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவும் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
 
மேலும் ஜிம்பாப்வே குறித்து கூறுகையில், “இது ஒரு சிறந்த செயல்முறை என்று நினைக்கிறேன். முக்கிய நேரத்திலும், எதிர்தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட அழுத்தத்திற்கு இடையிலும் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது முக்கிய காரணம் ஆகும். பந்துவீச்சு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.