800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் முரளிதரனுக்கு கவுரவம்

800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் முரளிதரனுக்கு கவுரவம்


Dinesh| Last Modified வியாழன், 28 ஜூலை 2016 (13:10 IST)
புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 


‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களின் பெயரை இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவிக்கிறது.

அந்த பட்டியலில் புதியதாக இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சிறப்புக்குரியவர் முரளிதரன். இலங்கை நாட்டவர் ஒருவருக்கு இந்த கவுரவம் கிடைக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.  


இதில் மேலும் படிக்கவும் :