குழந்தை நடை பழகும் ஹர்திக் பாண்டியா..வைரல் வீடியோ

Arun Prasath| Last Updated: புதன், 9 அக்டோபர் 2019 (10:23 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா, முதுகில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அறுவை சிகிச்சை நடந்த நிலையில், தற்போது நடை பழகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென் ஆஃப்ரிக்காவிற்கு எதிரான டி 20 போட்டியின் போது, முதுகில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவிற்கு லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், எழுந்து நடை பழகும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஹர்திக் பாண்டியா மருத்துவமனையில் தனது நண்பரின் உதவியுடன் மெதுவாக அடி அடியாக எடுத்து வைத்து நடக்கிறார்.

இந்த வீடியோவில் அவர், ”என்னுடைய உடல்நிலை சீராக உள்ளது. என் உடல்நிலைக்கான உங்களது அன்பை செலுத்தியதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :