வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வியாழன், 28 ஜூலை 2016 (15:18 IST)

ஹர்பஜன் சிங் - கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

ஹர்பஜன் சிங் - கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

இந்தியாவின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்- மனைவி கீதா பஸ்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.



இவர்களது திருமணம் கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி ஜலந்தரில் நடந்தது. தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் கீதாவுக்கு பிரசவமாகியுள்ளது. இந்த செய்தியை ஹர்பஜன் சிங்கின் தாயார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் இந்த தகவலை இதுவரை ஹர்பஜன் சிங்கோ அல்லது கீதாவோ தங்களது டிவிட்டர் அல்லது பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கவில்லை. தற்போது ஹர்பஜன் சிங் தனது மனைவியின் அருகே இருப்பதாக இந்தி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.