1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (18:16 IST)

’ஷேவாக் வேண்டும்; ஹர்பஜன் சிங் கடினமாக முயற்சிக்க வேண்டும்’ - முன்னாள் பத்துவீச்சாளர் கருத்து

ஹர்பஜன் சிங் மிகவும் கடினமாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பத்துவீச்சாளர் வெங்கடபதி ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 63 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இரண்டாவது இன்னிங்ஸில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களான ரங்கணா ஹெராத் (7 விக்கெட்டுகள்), தரிந்து கௌசல் (3 விக்கெட்டுகள்) ஆகியோர் இந்திய அணி தோல்வியை சந்திப்பதில் முக்கிய பங்களித்தனர்.
 
முதல் இன்னிங்ஸில் கூட, அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். ஆனால், சுழற்பந்து வீச்சிற்கு சாதகமான மைதானத்தில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு அணியில் இடம் பிடித்த ஹர்பஜன் சிங் 25 ஓவர்கள் வீசி, 90 ரன்களை வாரி இறைத்துள்ளார். ஆனால் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் பத்துவீச்சாளர் வெங்கடபதி ராஜு, ”தனது நடவடிக்கைகளை சரிசெய்திருக்கும் அதே வேளையில், அவர் தனது மறுவாழ்வு கட்டத்திற்குள் நுழைந்துள்ளார். அணிக்கு திரும்பி வந்திருக்கும் வேளையில், மிகவும் கடினமாக முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
 
இதில், அனுபவத்தின் மீதுள்ள குறைபாடுகள் எதுவும் கிடையாது. சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிந்திருக்க வேண்டும். இது ஒரு முக்கிய பிரச்சனை. அணிக்குள் மீண்டும் வந்துள்ளபோது, இன்னும் தங்களை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்வது அவசியம்” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், ”நீங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும்போது வீரேந்திர ஷேவாக் போன்ற ஒரு வீரருடன் களமிறங்குவது அவசியம். 400 ரன்களை குவிக்க எப்போதும் அது உதவும். இந்த இளம் இந்திய அணியினர், இனிமேல்தான் அனுபவத்தையும், பலனையும் பெறமுடியும்” என்றார்.