செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (10:30 IST)

நான்காவது ஒரு நாள் போட்டி ஆஸி. சிறப்பான தொடக்கம்: வார்னர், ஃபின்ச் அடித்தளம்

இந்தியா ஆஸ்திரேலியா இடையே கான்பெர்ராவில் நடக்கும் நான்காவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணி 24 ஓவருக்கு 143 ரன் குவித்து விக்கெட் இழப்பு எதுவுமின்றி விளையாடி வருகிறது.


 
 
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்ட ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆரோன் ஃபின்ச் 63 பந்துகளில் 52 ரன் எடுத்துள்ளார், டேவிட் வார்னர் 81 பந்துகளில் 86 ரன் எடுத்து இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
 
24 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் அந்த அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 143 ரன் குவித்துள்ளதால், ஆஸ்திரேலியா அணி நிச்சயம் இந்தியாவுக்கு ஒரு பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் பந்து வீச்சு முற்றிலுமாக எடுபடவில்லை.
 
இரண்டாவது பேட் செய்ய இருக்கும் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கடுமையான நெருக்கடி கொடுக்கும். இந்தியா பேட்ஸ்மேன்கள் இதனை எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பது தான் இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்கும். 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.