’பயப்படாதிங்க’ – வீரர்களுக்கு இன்சமாம் அறிவுரை

’பயப்படாதிங்க’ – வீரர்களுக்கு இன்சமாம் அறிவுரை

Dinesh| Last Modified வெள்ளி, 29 ஜூலை 2016 (09:43 IST)
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.


 
லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஆனால், ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் மோசமாக தோல்வியை சந்தித்தது. இதனால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை முன்னாள் வீரர்கள் கடுமையாகச் சாடினார்கள்.
 
ஆனால், இந்த மோசமான தோல்வியால் 3-வது போட்டி குறித்து அச்சப்பட தேவையில்லை சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எளிதாக வெற்றிப்பெறலாம் என பாகிஸ்தான் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :